முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்...!

 

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை தமிழகத்திலும் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாகி வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். திரைத்துறையில் முதல் நபராக நடிகர் சூர்யா மற்றும் குடும்பத்தினர் ரூ. 1 கோடி நிதி அளித்தனர். அவர்களை தொடர்ந்து அஜித் ரூ. 25 லட்சம், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ரூ. 25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 25 லட்சம் என பல்வேறு நட்சத்திரங்கள் கொரோனா நிதி வழங்கினர்.

இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். இதவிர,  திரைப்பிரபலங்கள் பலரும் ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.