சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு..!!

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் ‘மெகரசைலா..’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.காலத்தை மாற்றக் கூடியதாக சொல்லப்படும் டைம் லூப் என்ற வகையில் உருவாகியுள்ளது இந்தப் படம்.

இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படத்தை அமெரிக்காவில் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியிட உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ’பாகுபலி-2 படத்தை’ அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.