டிமாண்டி காலனி படத்தின் இயக்குனர் சொல்லிய த்ரில் தகவல்!
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டிமான்ட்டி காலனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக களம் இறங்கினார் இந்த படம் இவருக்கு மிக பெரிய ஹிட் தந்தது.
அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இவர் இயக்கத்தில் வெளியாகி வேற லெவல் செய்த திரைப்படம் தான் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் அதுவும் நன்கு பேசப்பட்ட படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படத்தை இவர் இயக்க துவங்கினார்…அந்த படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சுமாரான விமர்சனங்களை தான் பெற்றது.
இந்நிலையில் மீண்டும் அருள் நிதியை வைத்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பகுதியை தற்பொழுது உருவாக்கி முடித்துள்ளார்..அஜய் ஞானமுத்து…இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முடித்த பிறகு அந்த படத்தின் 3 மற்றும் நான்காம் பாகத்தை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..அப்போ கண்டிப்பாக மிக பெரிய பிளானில் உள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது…