ட்விஸ்ட் கொடுத்த டைரக்டர்..! சிறகடிக்க ஆசையில் சிறைக்கு சொல்கிறாரா ரோகிணி..?

 

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் பணத்தை திருடியது சத்யா தான் என்ற உண்மை எல்லாருக்கும் தெரிய வருகின்றது. இதனால் சத்யா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார் விஜயா. ஆனாலும் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குமாறு விஜயாவிடம் முத்துவும் மீனாவும் எவ்வளவு கெஞ்சியும் அவர் மனம் இறங்கவில்லை.

இதை தொடர்ந்து மீனா வீட்டில் இருந்தால் தான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று பார்வதி வீட்டுக்கு சென்றுள்ளார் விஜயா. இன்னொரு பக்கம் பிரச்சனையை முடிப்பதற்காக சிட்டியிடம் சென்ற ரோகிணி முறையாக சிக்கிக் கொண்டுள்ளார். தற்போது சிட்டியும் சேர்ந்து ரோகினியிடம் பணம் கேட்ப்பதற்காக மாஸ்டர் பிளான் போட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரோகினி ஜெயிலுக்குள் இருப்பது போல் காட்டப்படுகின்றது. கூடவே விஜயா வெளியில் நின்று அவரை மிரட்டுவது போலவும் தெரிகின்றது.

இதை வைத்து பார்க்கும் போது ரோகிணி இத்தனை நாட்களாக ஆடிய தில்லாலங்கடி வேலைகளில் ஏதோ ஒன்று மாற்றப்பட்டுள்ளது போல தெரிகிறது. ஏற்கனவே தனது போன் தொலைந்து விஷயத்தில் முத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். அதில் பிடிபட்டாரோ தெரியவில்லை.

பல நாட்களாக ரோகிணி எப்போது வீட்டில் சிக்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு இனிவரும் எபிசோடு சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரோகிணி சிறையில் இருக்கின்ற வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.