படக்குழுவினர் அதிர்ச்சி..! இணையத்தில் வெளியான 'கங்குவா'..!
Nov 15, 2024, 13:36 IST
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கங்குவா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
இந்நிலையில் கங்குவா படம் வெளியான சில மணிநேரங்களில், படத்தின் முழு பதிப்பும் ஆன்லைனில் கசிந்துள்ளது. பல்வேறு டொரண்ட் தளங்கள் மற்றும் செய்தி தளங்களில் பகிரப்பட்டு வரும் இப்படத்தின் திருட்டு நகல் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1080p முதல் 240p வரையிலான பல தரவிறக்க குவாலிட்டிகளில் கசிந்துள்ளது.