சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..! இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்..!
Jul 18, 2025, 06:05 IST
இயக்குநர் வேலு பிரபாகரன் மதியம் 12:20 மணியளவில் காலமானார்.
சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வேலு பிரபாகரன் தமிழ் சினிமாவில் மாறுபட்ட இடத்தைப் பெற்றிருந்தவர். விமர்சகர்கள், சமூக அமைப்புகள், அரசியல் குழுக்கள், ஒருபுறம் அவரை கடுமையாக எதிர்த்தாலும், இன்னொருபுறம் அவரை சிந்தனையை தூண்டும் இயக்குநராக பலரும் பாராட்டினர். அத்தகைய இயக்குநர் இன்று காலமான செய்தி அனைத்து திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.