விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..!
Jul 18, 2024, 09:05 IST
விடுதலை படத்தின் மூலமே நடிகர் சூரி நாயகனாக அவதாரம் எடுத்திருந்தார். இந்த படத்தில் அவர் எடுத்த விடாமுயற்சி, உழைப்பு என்பவற்றிற்கு தக்க பலன் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட்டாகி வருகின்றார் சூரி.
விடுதலை முதலாம் பாகத்தில் கிடைத்த எதிர்பார்ப்பு அதன் இரண்டாம் பாகத்தை மேலும் பார்ப்பதற்கு ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அட்டகத்தி தினேஷ் என பலரும் புதிதாக இணைந்து நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது விடுதலை இரண்டாம் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. அந்த ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு கத்தியுடன் இருக்க, இன்னொரு போஸ்டரில் மஞ்சு வாரியுடன் ஜோடியாக நிற்கின்றார். தற்போது குறித்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.