ரோகிணி செய்த நல்ல காரியம்... கடும் கோவத்தில் ஸ்ருதி!
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலின் எபிசோட்டில், விஜயா பார்வதியிடம் கொலு பொம்மை வைப்பதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க, நல்ல விடயம் தானே என்று பார்வதி சொல்கின்றார். மேலும் தன்னை அண்ணாமலை பாட சொல்லியதாகவும் சொல்கின்றார்.
அந்த நேரத்தில் காதல் ஜோடி ரூமுக்குள் நின்று நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க சாப்பாடு கொண்டு வந்த மீனா, அதை பார்த்து விடுகின்றார். இதனால் விஜயா கீழே இறங்கி வரும் நேரத்தில் அந்தப் பிள்ளை அழுது கொண்டே மீனா தன்னை திட்டுவதாக பிளேட்டை மாற்றி போடுகின்றார். இதனால் விஜயா என்ன என்று விசாரிக்காமல் மீனாவுக்கு திட்டி அனுப்பி விடுகின்றார்.
இதை தொடர்ந்து முத்து கொலு பொம்மைகளை வாங்கி வருகின்றார். வீட்டில் செய்கின்ற விசேஷம் என்பதால் மனோஜிடம் காசு கேட்க, அவர் கொடுக்கவில்லை. ஆனால் ரோகிணி தருவதாக கொடுக்கின்றார். அதேபோல ஸ்ருதி அரைவாசி ரவி அரவாசி காசு தருவதாக சொல்லுகின்றார்கள்.
மேலும் காலையிலேயே ரவி ரெஸ்டாரண்டுக்கு செல்ல, ஸ்ருதி ஏன் இவ்வளவு சீக்கிரம் செல்கின்றார் என கேட்க, நீது வர சொன்னதாக சொல்லுகின்றார். மேலும் தான் அவருடனே சாப்பிடுவதாக சொல்லி செல்கின்றார். இதனால் ஸ்ருதி கோபப்படுகின்றார் இதுதான் இன்றைய எபிசோடு.