தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ‘லியோ‘ பட நடிகர்..!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள். மேலும் இப்படத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சஷ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் கேஜிஎப்-2 படத்தில் வில்லனாக நடித்து அசத்திய ஹிந்தி நடிகர் சஞ்சய்தத் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் ‘லியோ‘ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் சஞ்சய் தத் தற்போது ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறார். அது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யும், சஞ்சய்தத்தும் நேரடியாக மோதிக் கொள்ளும் ஒரு சண்டைக்காட்சி விரைவில் காஷ்மீரில் படமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.