அடுத்த விஜயசாந்தி ரட்சிதா மகாலட்சுமி தான் போல...
ரட்சிதா மகாலட்சுமி ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் எக்ஸ்ட்ரீம். இந்த படத்தை ராஜவேல் கிருஷ்ணா இயக்க, இதனை கே. ராஜன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் ரட்சிதா மகாலட்சுமி உடன் அபி நட்சத்திரா, ராஜேஸ்வரி, அம்ரிதா, சிவம், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஆர். எஸ். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் நிறைந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான எக்ஸ்ட்ரீம் படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக வெளியாகி வருவதோடு அதில் நடிகை ரட்சிதா மகாலட்சுமியின் நடிப்பும் பெரிதளவில் பாராட்டப்பட்டுள்ளது.
அதன்படி படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் பேட்டி கொடுக்கையில், அடுத்த விஜயசாந்தி ரட்சிதா மகாலட்சுமி தான். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு அதிரடியாக காணப்படுகிறது.
இந்த படம் சூப்பரா இருக்குது. டிரஸ் விஷயத்துல நிறைய கருத்துக்கள் சொல்லி இருக்காங்க. அத்துடன் திரில்லர் நிறைந்த கதை களத்தில் இந்த படம் உள்ளது. இந்த படம் குடும்பத்தோட கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக உள்ளது.
இந்த காலத்திற்கு ஏற்ப பெண்களுக்கு தேவையான கருத்துக்களையும் அழகாக இயக்குநர் எடுத்துச் சொல்லியுள்ளார். பெண்களுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி இந்த படம் வெளியாகி உள்ளது.
ரட்சிதா மகாலட்சுமி நடிப்பில் நாங்க பார்க்கும் முதல் படம் இது. அவங்களுக்கு பொலிஸ் கெட்டப் சூப்பரா இருக்கு. நடிப்புல பட்டைய கிளப்பிட்டாங்க.. அடுத்த விஜயசாந்தி ரட்சிதா மகாலட்சுமி தான் என குறிப்பிட்டுள்ளனர்.