என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.. நான் கேரளாவை விட்டு செல்கிறேன் - நடிகர் பாலா..!
பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின் டாக்டர் எலிசபெத் என்பவரை ரகசியமாக பாலா திருமணம் செய்திருந்தார், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாலா மீது அவரது முதல் மனைவி, என்னையும் எனது மகளையும் வழிமறித்து பாலா தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்க காவல்துறையினரால் பாலா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியாகியுள்ள பாலா பேட்டியில், தனது குடும்ப சொத்தில் இருந்து எனது பங்காக ரூ. 250 கோடி சொத்து வந்துள்ளது.
அதன் அறிவிப்பு வெளியானதில் இருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். 3வது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பான செய்திகள் தற்போது நெட்டிசன்களினால் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது