இனி அந்த நடிகை நடிக்க வாய்ப்பே இல்லை - பயில்வான்..!
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,கீர்த்தி சுரேஷ் தற்போது மார்க்கெட் போன நடிகையாக மாறிவிட்டார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்தாலும் இவர், தற்போது அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கேட்டு நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதுதான் அவருக்கு பிரச்சனையாக அமைந்து போனது.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில், சில படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். பின், தான் அப்படி நடிக்கப் போவதில்லை என தெளிவாக கூறிவிட்டார். இதனால் அவர் படங்களை எடுக்க சில தயாரிப்பாளர்கள் தயங்கினர். பின், அவர் சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததில் இருந்து கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க முடிவு செய்தார். இதனால், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பை இவர் இழக்கிறார்.
இதனால் தான் இப்போது ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதுவும் மிகவும் கவர்ச்சியாக தனது உடையை மாற்றிக் கொண்டார். பிள்ளைகள் பெற்ற பின் ஹிந்தியில் நடிக்கச் சென்ற ஜோதிகாவே கவர்ச்சியாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கும் போது, கீர்த்தி கவர்ச்சியாக உடை அணிவதில் என்ன தவறு.
இந்தப் படத்திற்கு பின் இவருக்கு வாய்ப்பு வருமா வராதா எனத் தெரியாததால் தான் தற்போது தனது கல்யாண செய்தியை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, இவர் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். சினிமாவில் நடிகர் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் போது கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகி கிசுகிசுக்கப்படுவது சாதாரணம் தான். இவரும் அனிருத்தும் கன்னத்தோடு கன்னம் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.
இதனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், அனிருத்தின் குடும்பம் பக்கா பிராமண குடும்பம். அதனால் , இவர்களது காதலை ஏற்றுக் கொள்வது எல்லாம் நடக்காத காரியம்.
அதுமட்டுமின்றி, அவர் மார்க்கெட் போனதால் தான் கல்யாணமே செய்ய உள்ளார். எனவே, திருமணத்திற்கு பின் அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை. அப்படியே அவர் நடித்தாலும் கதாநாயகியாக இல்லாமல் துணை கதாப்பாத்திரம் தான் தர வாய்ப்புள்ளது. அதுவும் இல்லாமல் அவர்களுக்கு காசு பிரச்சனை இருந்தால் தான் நடிக்க வர வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.