இந்த நடிகை தான் நிறைய Youngsters-க்கு ரோல் மாடல்! அர்ச்சனா கொடுத்த பேட்டி..!

 

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக காணப்பட்டார் ப்ரியா பவானி சங்கர்.

இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார்.

இறுதியாக உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை விட நெகட்டிவ் விமர்சனங்கள் தான்  அதிகமாக குவிந்தது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நாயகியாக நடித்து அதற்குப் பிறகு வெள்ளித்திரையில் ஹீரோயின்களாக வலம் வரும் நடிகைகள் தற்போது ஏராளமாக உள்ளனர். அந்த வகையிலே பிரியா பவானி சங்கர், வாணி போஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் போன்ற பல பேரை குறிப்பிடலாம்.

இந்த நிலையில் டிமான்டிங் காலனி 2 திரைப்படத்தில் நடித்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவிச்சந்திரன் தனக்கு மட்டுமில்லாமல் பல இளைஞர்கள், யுவதிகளுக்கு பிரியா பவானி சங்கர் ஒரு ரோல் மாடலாக இருப்பதாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி டிமான்டி காலனி 2 திரைப்படம்வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் நடித்தவர்களை பேட்டி எடுத்து வருகின்றார்கள். இதன் போது பேசிய அர்ச்சனா, தனக்கு இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் உடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நிறைய இடங்களில் அவர் எனக்கு மட்டுமில்லாமல் நிறைய இளைஞர்களுக்கு ரோல்மோடாக காணப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.