குமரி கண்டத்துல இந்த ஏஜிஆர் ஆட்சி தான் நடக்குது  - மிரட்டலாக வெளியான பத்து தல டீஸர்..!!  

 

'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் உருவாகி வருகிறது.. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் சிம்புவின் வசனங்கள் அனல் பறக்க உள்ளது. 

<a href=https://youtube.com/embed/tyzikpc8Ctg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tyzikpc8Ctg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">