இது முழுக்க முழுக்க பொய்..! மேஜர் முகுந்தின் உண்மை ஹிஸ்டரி இது இல்ல.. ராணுவ வீரர் பகீர்..!  

 

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். இந்த படத்திற்காக கடும் ரிஸ்க் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தனது உடல் கட்டமைப்பை மாற்றி ஒரு ராணுவ வீரர் போலவே படத்தில் வாழ்ந்துள்ளார்.

அமரன் படம் சுமார் 130 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முதல் நாள் வசூல் மட்டுமே 42.3 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் சிறந்த திருப்பு முனையாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், அமரன் படத்தில் சாத்தியமில்லாத பல முட்டாள்தனமான காட்சிகள் உட்பகுத்தப்பட்டதாக மேஜர் முகுந்துடன் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் தான் அமரன் படத்தை பார்க்கச் சென்றேன். ஆனால் இந்தப் படத்தில் சில சம்பவங்கள் உண்மைக்கு மாறாக திணிக்கப்பட்டுள்ளது.

அதிலும் போருக்கு போவதாக சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சி , அச்சமில்லை அச்சமில்லை என நிலத்தில் தட்டுவது போன்ற காட்சி எல்லாம் முட்டாள்தனமாக காணப்படுகின்றது. இப்படி நடப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லை. மேலும் இதுவரையில் ஒரு ஆர்மி சோல்ஜர் கூட மூன்று மாதத்தை கம்ப்ளீட் பண்ணதே கிடையாது. அதாவது லீவே குடுக்க மாட்டாங்க.. ஆனால் படத்தில் வேறு மாதிரி காட்டப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ வீரர் ஒருவர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும்போது கூட ஆர்மி உடுப்பு போட்டு முழு இராணுவ உடையில் தான் வருவோம். ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் வெறும் பனியனுடன் வருகின்றார். அவர் இந்த படத்தில் சூப்பர் மேன் ஆக காட்டப்பட்டுள்ளாரா? என்று அமரன் படத்தில் நடந்தவை எல்லாம் மேஜர் முகுந்த் வாழ்க்கையில் உண்மையாக நடந்தது  இல்லை என அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 

<a href=https://youtube.com/embed/pQC84ejwWEs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/pQC84ejwWEs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">