லியோ படத்தில் எனக்கு பிடித்த சீன் இதுதான்... இயக்குனர் அட்லி..!
லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக லியோ வெளியானது. இந்தப் படம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதிலும்சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 580 கோடி ரூபாய்களை படத்தின் வசூல் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விரைவில் படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக விஜய்யின் தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ள அட்லி, தற்போது லியோ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேட்டியொன்றில், இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் படத்திற்கு படம் லோகேஷ் கனகராஜின் படமியக்கும் திறன் அதிகரித்து வருவதை தான் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் காபி ஷாப் காட்சி தனக்கு மிகவும் பேவரிட் என்றும் கூறியுள்ளார். மேலும் லோகேஷின் படங்களின் வில்லன்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் அவர் எப்போதுமே வழக்கமான ஃபார்மேட்டை உடைத்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் நாயகனின் கெத்தையும் தன்னுடைய படங்களில் அவர் மெயின்டெயின் செய்து வருவதாகவும் அட்லி மேலும் கூறியுள்ளார். இன்றைய தினம் லியோ படம் 24வது நாளை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.