இது தான் நாக சைதன்யா - சோபிதா துலிபா திருமண அழைப்பிதழ்..!  

 

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் நாகர்ஜுனா. இவர் இரண்டாவதாக அமலா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே சினிமாவில் டாப் நடிகர்களாக வலம் வருகின்றார்கள்.

நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 2017 ஆம் ஆண்டு  பிரபல நடிகையாக காணப்பட்ட சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதைத்தொடர்ந்து நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுடன்  ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அதன் பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில், நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும்  திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. அதன்படி தற்போது இவர்களின் திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டோடியோவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இவர்களின் திருமண  அழைப்பிதழ் டிரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.