இது பிரபுதேவா இல்ல... பிரபு’தேவி’: மிரட்டும் பஹிரா டிரெய்லர்..!
 

 

பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டிரெய்லரில் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் படங்களை இயக்க மட்டுமே செய்யும் பிரபுதேவா, தமிழில் நடிக்க மட்டுமே செய்கிறார். வரிசையாக பல படங்களை நடித்து முடித்துள்ளார். அதேபோல புதிய படங்களில் நடிக்கவும் ஒப்புக்கொண்டும் வருகிறார்.

இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் பஹிரா. பரதன் என்பவர் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்துக்கு கணேஷ் என்கிற புதுமுகம் இசையமைத்துள்ளார்.

பஹிரா படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா ஆண்டிஹீரோ வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. முதன்மை நாயகியாக ஜனனி நடித்துள்ளார்.

மேலும் காயத்ரி, சாக்‌ஷி அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பிரபுதேவாவுக்கு படத்தில் ஒரு பெண் வேடம் இருப்பது ஹைலைட் அம்சமாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.