இது தான் நடிகர் விஜயின் குணம்.... ரகசியம் உடைத்த தளபதி அம்மா...! 

 

தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் கட்சி ஆரம்பித்து  புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். தனது 69வைத்து திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு கொடுத்திருந்தார். 

அரசியல், நடிப்பு என்று மிகவும் பிஸியாக வலம் வரும் விஜய் சமீபத்தில் அவருடைய தவெக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார். அதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில், விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகர் விஜய்யின் இந்த வளர்ச்சி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில் " சிறு வயது முதல் விஜய் அவர் என்ன நினைக்கிறாரோ அதை கண்டிப்பாக செய்து முடிப்பார். தனக்கு பிடித்த விஷயத்தை செய்துமுடிய வேண்டும் என்று பல தடைகளை தாண்டி செய்து முடிப்பார். அது தான் அவரது குணம்.  எங்களுக்கு விஜய் சிறுவயதில் இருந்து ஒரு ஆசை இருந்தது அவரை டாக்டராக பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவர் ஆக்டர் ஆகிவிட்டார். 

தற்போது, அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளார். புதிய கட்சி ஆரம்பித்து மக்களுக்காக பணியாற்ற தனக்கு பிடித்த துறையை விட்டு செல்கிறார்.  அரசியலில் அவர் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று ஷோபா கூறியுள்ளார்.