இது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முதலில் வைக்க வந்த டைட்டில்..!

 

அண்ணன் தம்பியின் பாச கதையாக ஒளிபரப்பாகி ஐந்து வருடங்கள் ஓடிய இந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த வாரம் முடிவுக்கு வந்த சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.

இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் கலந்து தான் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் சீசனுக்கு முதன் முதலாக வைக்கப்பட இருந்த பெயர் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் சுஜிதா.

இது குறித்து சுஜிதா அளித்த பேட்டியில் இந்த சீரியலுக்கு முதலில் தாமரை என்று தான் பெயர் வைக்க இருந்தனர். அதன் பிறகு சில காரணங்களால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என பெயர் மாற்றியதாக தெரிவித்துள்ளார். ‌