உலக நாயகனா இது..!  சுத்தமா அடையாளமே தெரியலையே? வெளியான ‘கல்கி 2898 ஏடி’ டிரைலர்..!

 

ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ’கல்கி 2898 ஏடி’.  இந்நிலையில் படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரம்மாண்டமான செட்டிங் காட்சிகள், ஆச்சரியப்பட வைக்கும் விஞ்ஞான காட்சிகள், ஹாலிவுட் தரத்தில் நடிகர் நடிகைகளுக்கு மேக்கப், பிரமாண்டமான சண்டை காட்சிகள் என இந்த மூன்று நிமிட ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை அசத்துகிறது.

உலக தரத்தில் மேக்கப் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. குறிப்பாக கமல்ஹாசனை கொஞ்சம் கூட அடையாளமே தெரியாத அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு மேக்கப் செய்துள்ளனர்.

’தசாவதாரம்’ படத்தில் 10 கேரக்டரில் நடித்த கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு மேக்கப் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அவருக்கு  வேற லெவலில் மேக்கப் அதை எடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரித்திர காலம் மற்றும் நவீன காலம் என இரண்டையும் இணைக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ள நாக் அஸ்வின் இந்த படத்தை மிரட்டி உள்ளார் என்றே சொல்லலாம். குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரள வைக்கிறது. மொத்தத்தில் இந்த படம் இந்திய திரை உலகின் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<a href=https://youtube.com/embed/-boPEbe6iaI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-boPEbe6iaI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">