இந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்- வாத்தியாக நடிக்கப்போகும் ஹீரோ இவர்தான்..!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி தமிழ்நாட்டு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற ‘மாஸ்டர்’ படம் இந்தியில் ரீமேக்காவுள்ளது.

கொரோனா சூழலால் தமிழ்நாட்டில் நிலவி வந்த தாக்கத்தை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படத்துக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவருடைய கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி மாஸ்டர் படத்தில் நாயகனாக சல்மான் கான் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் கதையை கேட்டு அவர் சம்மதித்து விட்டதாகவும், விரைவில் வாத்தியாக நடிப்பதற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.