இதுதான் மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்: சர்பரைஸ் விஜயசேதுபதி..!

 

படம் முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக வெளிவராமல் உள்ள ‘மாமனிதன்’ படத்தின் புதிய அப்டேட் குறித்து நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி இருவரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முடிக்கப்பட்ட படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார், சீனு ராமசாமி இயக்கியுள்ளார். 

முதன்முறையாக இளையராஜா மற்றும் அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து ‘மாமனிதன்’ படத்திற்கு இசை அமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் இந்த படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.

ஆனால் இந்த படத்தை திட்டமிடப்படி வெளியிட முடியவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது மாமனிதன் படத்திற்கான பிரச்னைகள் முடிக்கப்பட்டு, விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன் முதல் முயற்சியாக மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. இதை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் அறிவித்துள்ளனர்.