ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்- காரணம் இதுதான்..!!

இந்தி சினிமாவை கடந்து, தென்னிந்திய சினிமாக்களிலும் நடிக்க துவங்கியுள்ள ஜான்வி கபூரை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். இதனால் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல போஸ்டுகள் சமூகவலைதளங்களில் குவிந்து வருகின்றன.
 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல இந்திப் படங்கள், ஓ.டி.டி வெளியீடுகளில் ஆர்வங்காட்டி நடித்து வருகிறார்.

ஜான்வி கபூரை பலரும் தமிழ் படங்களில் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் என்.டி.ஆர் நடிப்பில் தயாராகி வரும் ’தேவரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனால் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவரா என்கிற கேள்வி பலரிடையே எழுந்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்வி விமான நிலையத்துக்கு வந்தபோது, கையில் தலையணையுடன் வந்தார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து விமானத்தில் உட்கார்ந்து பயணிக்கவுள்ள உங்களுக்கு, எதற்கு தலையணை என பலரும் ஜான்வியை ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.