இதனால தான் கோட் படம் தெலுங்கு ஆடியன்ஸ்க்கு ரீச் ஆகாமல் போய் இருக்கு - வெங்கட் பிரபு சொன்ன ஷாக் பதில்..!  

 

விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதோடு பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன் என பலரும் நடித்திருக்கும் படம் தான் கோட்.  

கோட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 126 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருந்தது. ஆனாலும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் 148 கோடிகளை வசூலித்திருந்தது. அந்த சாதனையை கோட் திரைப்படம் முறையடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கோட் திரைப்படம் திரும்பிய பக்கம் எல்லாம் சாதனை படைத்து வந்தாலும் தெலுங்கில் அட்டர் பிளாப் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

அதாவது கோட் படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா வெளியிட்டு உரிமை மட்டும் 21 கோடிக்கு விற்பனையானது. இதன் தெலுங்கு வெளியிட்டு உரிமையை மைத்ரி மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது. விஜயின் கேரியரில் தெலுங்கு மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனையானது கோட் திரைப்படம்.

இப்படம் அந்த மாநிலங்களில் பிரேக் ஈவன் செய்ய வேண்டும் என்றால் 35 கோடியை வசூலிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் மொத்தமாக எட்டு கோடியை தான் வசூலித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பார்வையாளர்கள் குறைந்து  தெலுங்கில் படு தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் அப்படம் தெலுங்கு ஆடியன்ஸ்க்கு ரீச் ஆகாமல் போய் இருக்கலாம் என்று ஒரு பூகம்பத்தை கிளப்பியுள்ளார் வெங்கட் பிரபு. அத்துடன் தெலுங்கில் லியோ திரைப்படம் 50 கோடி வரை  வசூலித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.