ஹாலிவுட் படங்களை பின்னும் தள்ளி முதலிடத்தில் துணிவு..!!

இந்தியாவில் ஆன்லைன் மூலமாக பார்க்கப்பட்ட படங்களுக்கான வரிசையில், பல ஹாலிவுட் மற்றும் இந்தியப் படங்களை பின்னுக்கு தள்ளி துணிவு படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

போனி கபூர் இயக்கத்தில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான படம் துணிவு. அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், பாவ்னி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

வங்கிக் கொள்ளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், முதலீட்டு  விவகாரங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக பலரும் குறிப்பிட்டு பேசினர். 

திரையரங்க வெளியீட்டை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் துணிவு படம் வெளியானது. அப்போது முதல் இன்றும் துணிவு படத்தை பலரும் ஓ.டி.டி தளத்தில் தொடர்ந்து பலரும் பார்த்து வருகின்றனர். தற்போது இதுவரை Netflix தளத்தில் வெளியான படங்களில் அஜித்தின் துணிவு படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதற்கான பட்டியலை நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு முதலிடத்திலும் மிஷன் மஞ்சு இரண்டாவது இடத்திலும், வாத்தி மூன்றாவது இடத்திலும், ஆக்‌ஷன் ஹீரோ நான்காவது இடத்திலும், சர்கஸ் படம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.