டிக்டாக் பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
டிக்டாக்கில் கவர்ச்சியாக நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு அதிகளவான ரசிகர்களை கவர்ந்தவர் இலக்கியா
பின் டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். அதுமட்டுமல்லாது, யூடியூபில் சமையல் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வந்தார் இலக்கியா.
இந்நிலையில் அந்த இளம்பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதிகமான உடற்பயிற்சி மற்றும் அழகு சார்ந்த ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகளவாக சாப்பிட்டதனால் மயக்கமடைந்து தற்பொழுது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலீஸார் இலக்கியா தற்கொலைக்கு முயன்றாரா.? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரபல சண்டை காட்சி இயக்குநருடன் இலக்கியாவிற்கு தொடர்பு இருந்தது எனவும், அவர் ஏமாற்றிவிட்டதால் தான் இலக்கியா இந்த முடிவினை எடுத்தார் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த சரியான முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.