இன்று நம்ம கொடி பறக்கும்; தமிழ்நாடு சிறக்கும்' தளபதி வெளியிட்ட அதிரடி அறிக்கை..!

 

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களால் விஜய் சினிமா துறையில் இருந்து விலகுவதை பொருட்படுத்த முடியவில்லை. ஆனாலும் சிலர் விஜய் ஆரம்பித்த கட்சியில் தொண்டர்களாகவே சேர்ந்திருந்தார்கள்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதனை விரிவு படுத்துவதற்காக புதிய செயலி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு பல்லாயிரக்கணக்கானோர் அதில் மிகவும் இலகுவாக இணைந்து கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக கட்சி செயல்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றார் விஜய்.

அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாக மாறப்போகும் நம் வீரக்கொடியை, வெற்றி கொடியை தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொடியுடன் சேர்த்து தமது கட்சி பாடலையும் வெளியிட உள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையோடு 'இன்று முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்' எனக் கூறி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.