அதீத அழகே ஆபத்தானது! மின்னலே நடிகையின் சோக கதை!

 
ஜெர்மன் தந்தைக்கும், பெங்காலி தாய்க்கும் பிறந்தவர் தான் இந்த பாலிவுட் நடிகை தியா மிஸ்ரா.

தமிழில் மாதவன் மற்றும் ரீமாசென் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  மின்னலே படத்தின் இந்தி ரீமேக் 2001ம் ஆண்டு வெளியானது. ‘ரெஹ்னா ஹை தேரே தில் மே’ என்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். 

தனது அதீத அழகால் பட வாய்ப்புகளை தவற விட்டவர். தவற விட்டார் என்று சொல்வதை விட, அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. நல்ல கதை கொண்ட அர்த்தமுள்ள படங்களில் அதிக ஆர்வம் காட்டினார் நடிகை தியா மிர்சா.  இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தியா மிஸ்ரா கூறுகையில், “மெயின்ஸ்ட்ரீம்’ நடிகையாக என்னை இயக்குநர்கள் பார்த்ததால், நான் விரும்பிய நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமலேயே போனது” என்று கூறினார்.