இந்த 2024ல் ரசிகர்களை அதிர வைத்து டாப் 5 கோலிவுட் சர்ச்சைகள்..! 

 

மிஸ்டர் க்ளீன் என்று எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகர் ஜெயம் ரவி முதல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரையிலான விவாகரத்து செய்திகள் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லிஸ்ட் போட்டு எழுதுவது உசிதமில்லை... இந்த விவாகரத்து ஜோடிகள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே நமது விருப்பம். இன்னமும் கூட அதற்கான வழிமுறைகளும், காலமும் காத்திருக்கின்றன. 

ஜெயம் ரவி - ஆர்த்தி :

கணவன், மனைவிக்குள் பிரச்சனை, ஈகோ ப்ராப்ளம் என்று கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகள் புகைய ஆரம்பித்த போதும் கூட திரையுலகினரே அதையெல்லாம் புறந்தள்ளி, அந்த ஜோடி காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமா இருக்காங்க... இது யாரோ பொறாமையில் கிளப்பி விடுகிற வதந்தி என்று புறந்தள்ளினார்கள்.

ப்படி ஓவர் நைட்டில் சர்ச்சை சுழன்றடித்தது ஜெயம் ரவி வாழ்க்கையில். விவாகரத்து குறித்த செய்திகளுக்கு மாதக்கணக்கில் இருவருமே வாய் திறக்காமல் இருந்த நிலையில், திடீரென விவாகரத்து செய்தியை அறிவித்தார் ஜெயம் ரவி. அதன் பின்னர் ஆர்த்தியின் அறிக்கை, பாடகி கெனிஷாவுடன் காதல் இருப்பதாக கிளம்பிய சர்ச்சை என்று வருட முடிவில் சர்ச்சைகளின் நாயகனானர் ஜெயம் ரவி. 

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

ஹீரோ வேஷம் கட்டப் போறேன் என்று சொன்ன போதே ஜிவி பிரகாஷ் குடும்பத்தில் புகைய துவங்கியது. அதன் பின்னர் ஹீரோயின்களுடன் ஜிவி காட்டிய நெருக்கம் எல்லாம் 10, 15 படங்களில் ஹீரோவாக நடித்தவர்களே காட்டாத நெருக்கம். படத்தின் கதை, ஹீரோயின் தேர்வு, பாடல் எங்கே எடுப்பது என்பது முதற்கொண்டு ஜிவி பிரகாஷின் ராஜ்ஜியம் தொடர்ந்தது என்று யூனிட் ஆட்களே புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

டப்பிடிப்புகளைத் தாண்டியும் நீண்டுக் கொண்டே போன ஹீரோயினுடனான நெருக்கம் என்று ஜிவி படங்களைத் தாண்டியும் சர்ச்சைகளின் மூலமாக லைம் லைட்டிற்குள் நுழைந்த ஜிவி, சைந்தவியுடனான விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஜிவி பிரகாஷ்.  ஸ்கூல் டேஸ் முதல் காதலித்து வந்தவர்கள் தங்களது திருமண பந்ததை முறித்துக் கொண்டார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் - சாஹிரா

இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நடிகர்களில் மிஸ்டர் க்ளீன் என்று டி.ராஜேந்தரைச் சொல்லலாம் என்றால் இசையமைப்பாளர்களில் மிஸ்டர் க்ளீன் ஏ.ஆர்.ரஹ்மான். அவரே அதிர்ச்சியாகி, விரைவில் திருமண வாழ்வின் மிகப் பெரிய கொண்டாட்டங்களுக்காக காத்திருக்கும் தருணத்தில் இப்படியொரு அதிர்ச்சி வெளியாகி இருக்கிறது என்று கூறும்படி இருந்தது சாஹிரா பானுவின் விவாகரத்து செய்தி.

நாடு முழுவதுமே இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கூடவே அவசர அவசரமாக தனது ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றி வந்த மோகினி டே, தனது விவாகரத்தையும் அறிவித்து பரபரப்பை பற்ற வைத்தார். இவருடன் முடிச்சு போட்டு ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தியை இன்னும் பெரிதாக்கியது மீடியா.

அச்சச்சோ... என்று பதறியடித்து, தன் கணவர் நல்லவர் என்றும் தனது உடல்நிலைக்காக சிகிச்சைப் பெற்று வருவதால் தான் விவாகரத்து அறிக்கை வெளியிட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார் சாஹிரா. 

கங்குவா:

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறங்கி வைக்கிறேன் என்று அஞ்சாமல் ரசிகர்களிடையே கம்பு சுழற்றியது போல அமைந்தது ‘கங்குவா’ இதை ஒரு படம் என்று கடந்து போக முடியவில்லை. ரூ.2,000 கோடி வரை வசூல் சாதனை செய்யும் என்று ஞானவேல் ராஜா கம்பு சுற்றியது படத்திற்கு மிகப் பெரிய மைனஸாக அமைந்தது. இந்த வருடத்தின் மெகா ப்ளாக்பஸ்டர் தோல்வி படமாக சூர்யாவின் திரையுலக வாழ்க்கைக்கு பெரும் சறுக்கலாக அமைந்த கங்குவா, அவரை பரிதாபமாக நிற்க வைத்தது.

கூடவே இந்த நெய்யை எங்கே ஊற்ற வேண்டும் என்று மிக சரியாக நெருப்பில் கொட்டினார் அவரது மனைவி ஜோதிகா. ஜோதிகாவின் எகத்தாளமான சப்போர்ட் அறிக்கை படுமோசம். யூடியூப் சேனல்கள் விமர்சனம் வெளியிட தடை கோரி நீதிமன்றம் செல்லும் அளவுக்கு கொண்டு சென்றது. 

நயன் - விக்னேஷ் - தனுஷ்

தாரா, தனுஷ் ஆகியோ இடையே நடந்தது யுத்தம்தான் தமிழ் சினிமாவில் நடந்த உச்சகட்ட சர்ச்சை. தனது திருமணம் தொடர்பான டாக்குமெண்ட்ரியில் 'நானும் ரவுடிதான்' படத்தின் சிறிய காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடுகொடுக்க வேண்டும் என தனுஷ் தயாரிப்பு நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

தனுஷ் இல்லாமல் திரையுலகில் சர்ச்சையா என்கிற அளவுக்கு மிர்ச்சி சுசித்ராவிம் பிரச்சனைக்கு பின்னர் ஒவ்வொரு சர்ச்சைகளின் போதும் தனுஷ் பெயர் அடிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பகிரங்கமாகவே பொறாமைப் பிடித்தவர், பழி வாங்குகிறார் என்று ஏகத்துக்கும் தனுஷ் பெயரை டேமேஜ் செய்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நயன். இந்த பஞ்சாயத்து நீதிமன்றம் வரை இருவரையும் அழைத்து சென்ற நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. கூடவே கொசுறு வாங்குவது போல விக்னேஷ் சிவன் பாண்டிச்சேரியில் அரசாங்கத்திற்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசினார் என்று செய்தி கிளம்ப... அதெல்லாம் காமெடிங்க.. என்று விளக்கமளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.