சீனாவை தொடர்ந்து மற்றொரு சர்வதேச மொழியில் தயாராகும் த்ரிஷ்யம்..!

 

மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சீனாவை தொடர்ந்து மற்றொரு சர்வதேச மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்த படம் சீனா மொழியிலும் ரீமேக்  செய்யப்பட்டது. அங்கேயும் இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் த்ரிஷயம் படம் இந்தோனேஷிய மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக ஜீத்து ஜோசப் தன்னுடைய சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தோனோஷிய மொழியில் திரிஷ்யம் திரைப்படம் ரீமேக்காக உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக ஆசீர்வாத் சினிமா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் மலையாளம் படம் ஒன்று முதல் முறையாக இந்தோனோஷிய மொழியில் ரீமேக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.