த்ரிஷா நடித்த ’தி ரோடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 

த்ரிஷா நடிப்பில் அருண் வசீகரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான திரைப்படம் ‘தி ரோடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ்-க்கு தயாரானது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ என்ற திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த ’தி ரோடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி ’தி ரோடு’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ’லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் அடுத்த மாதம் த்ரிஷா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.