சர்ச்சை சின்னத்திரை ஜோடிக்கு குழந்தை பிறந்தது- ரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் அர்னாவ்..!!
 

அண்மையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள சூழலில், நேரில் சென்று குழந்தையை பார்க்காமல் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் அர்னாவ் செயல்பாடு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
 

செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர், சீரியல் நடிகர் அர்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் சில மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அப்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தார்.

இவர்களுடைய பிரிவு ஊடகங்களில் வரும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியது. கர்ப்பமாக இருந்த நடிகை திவ்யாவை அர்னாவ் தாக்கியதாகவும், வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனால் உடனடியாக அர்னாவ் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா ஸ்ரீதருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூகவலைதளத்தில் திவ்யா ஸ்ரீதர் பதிவிட்டு இருந்தார்.

குழந்தை பிறந்து பல நாட்களாகியும் இதுவரை அர்னாவ் பார்க்கவில்லை. ஆனால் குழந்தை மீது அதிகம் பாசம் இருப்பவர் போல ஊடகங்களில் அவர் பேசி வருகிறார். அதற்கு கீழே கமெண்டு செய்யும் நெட்டிசன்கள், இப்படியொரு ஈகோ தேவையே இல்லாதது. சீக்கரம் சென்று மகளை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் எடுக்கப்பட்ட நேர்காணலில் பேசியுள்ள அர்னாவ்  தனது குடும்பம் நாசமாக போகும் என திவ்யா ஸ்ரீதர் மண்ணை வாரி தூற்றிவிட்டு போனார். அவரிடம் குழந்தையை காட்டும்படி நான் கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.