கர்ப்பமாக இருக்கிறேனா..?? நடிகை பாவ்னி விளக்கம்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சின்னதம்பி தொடர் மூலம் பிரபலமானவர் பாவ்னி. அதை தொடர்ந்து ராசாத்தி, பாசமலர் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்தார். பிறகு தொலைக்காட்சி தொடர் எதிலும் நடிக்காமல் இருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக பங்கேற்றார். அங்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீருடன் நெருங்கிப் பழகினார். இருவரும் காதலிப்பதாக அப்போதே செய்திகள் உலா வந்தன.
நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த இருவரும், பல இடங்களில் ஜோடியாகவே சுற்றி திரிந்தனர். இருவரும் சேர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தனர். பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றனர்.
இதனால் பாவ்னி மற்றும் அமீர் நிஜ வாழ்க்கையிலும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை இருவரும் உறுதி செய்யவில்லை. தற்போது இருவரும் சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், லிவிங் டுகெதர் முறையில் வாழ்வதாக கூறப்படுகிறது.
அண்மையில் ரசிகர் ஒருவர், அமீருடன் திருமணம் முடிந்துவிட்ட தகவலை எங்களிடம் ஏன் சொல்லவில்லை? என்று கேட்டு பாவ்னியை டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஸ்டோரியில் பதிலளித்துள்ள பாவ்னி, கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னீர்கள். நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சொன்னீர்கள். இப்போது நான் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சொல்லுகிறீர்கள். அடுத்து என்ன? என்று வினவியுள்ளார்.