என்.டி.ஆர்; ஜான்வி கபூர் படத்தின் முக்கிய அப்டேட்..!!

என்டிஆர் 30 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
 

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் என்.டி.ஆர் 30 படம் வெளிவர இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அந்த படத்தை 2024-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்றவாறு படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்து வரும் ஷூட்டிங்கில், பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்களில் இதனுடைய ஷூட்டிங் முடிந்துவிடும்.

கொரட்டாலா சிவா இயக்கும் இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். என்.டி.ஆர் மற்றும் கொரட்டலா சிவா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். முன்னதாக இந்த கூட்டணியின் தயாரிப்பில் வெளியான ‘ஜனதா கரேஜ்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹீரோவுக்கு இணையாக என்.டி.ஆர் 30 படத்தில் ஹீரோயினின் பாத்திரம் படைப்பும் முக்கியத்துவம் பெறும். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு என்டிஆர் நடிக்கும் படம் என்பதா, இப்போதே தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.