அஜித் குமார் நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்..!!
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டுகள் தற்போது தெரியவந்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் படம் உருவாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் தயாரித்த கதை லைக்காவுக்கும் அஜித்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவர் மாற்றப்பட்டு அஜித்தின் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு வழங்கப்பட்டது.
எனினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிகவும் தாமதமாக தான் வந்தது. கடந்த மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைக்கே படத்தின் பெயர் ‘விடாமுயற்சி’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வரும் மே 22-ம் தேதி துவங்கப்படுவதாக இருந்தது. ஆனால் லைகா அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை சமீபத்தில் நடந்து வந்தது. இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தாமதம் ஆகலாம் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.