விரைவில் உருவாகும் சந்திரமுகி 2- படத்தில் வடிவேலு..!

 
பி. வாசு இயக்கத்தில் விரைவில் துவங்கவுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. இன்றும் இந்த படத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளியாகிவிட்டது. ஆனால் தமிழில் இன்னும் உருவாகவில்லை. தற்போது அதற்கான முயற்சிகளில் இயக்குநர் பி. வாசு இறங்கியுள்ளார்.

அதன்படி சந்திரமுகி 2-வில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளாராம். அத்துடன் சந்திரம் முதல் பாகத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் இந்த படத்தை உருவாக்க பி. வாசு திட்டமிட்டுள்ளார்.