உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு திடீர் சந்திப்பு..!
Sep 22, 2021, 13:28 IST
நடிகரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை நகைச்சுவை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மீண்டும் சினிமாவில் வடிவேலு நடிக்க தொடங்கியுள்ளார். அதை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்தார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்களை கூறினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்துப் பெசியுள்ளார். இருவருமிடையே நடந்த இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இம்சை 24-ம் புலிகேசி பட விவகாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். அதில் முதல் படத்தை சுராஜ் இயக்குகிறார். இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய படமாக அமையவுள்ளது.
அதை தொடர்ந்து வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் பல்வேறு திமுக தலைவர்களை வடிவேலும் சந்திக்கும் படலம் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.