வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கும் அடுத்த பட்டம் !
Aug 7, 2024, 09:05 IST
இளையராஜாவின் இசையில் 'பொன்மாலைப் பொழுது' பாடலை எழுதி தமிழ் திரையுலகில் காலடி வைத்த கவிஞர் வைரமுத்து. இதுவரை 6000 திரையிசை பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.இவரது கவித்திறனை பெருமை படுத்தும் விதமாக இவருக்கு கவிப்பேரரசு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அண்மையில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் கவிஞர் மேலும் "இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.