வலிமை பட நடிகையின் நெருங்கிய உறவினர் அடித்து கொலை..!

 

ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஹூமா குரேஷி. இவரது நெருங்கிய உறவினர் ஆசிப் குரேஷி. நிஜாமுதின் பகுதியில் உள்ள இவரது வீட்டின் முன்பு, அண்டை வீட்டாரின் பைக் நிறுத்தப்பட்டுள்ளது. பைக்கை எடுக்குமாறு ஆசிப் கூறிய நிலையில், இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிப் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

போலீசாரிடம் ஆசிப்பின் மனைவி சாய்னா குரேஷி கூறுகையில், 'பார்க்கிங் பிரச்னையில் இதற்கு முன்பும் மோதல் ஏற்பட்டிருந்தது. வழக்கம் போல ஆசிப் பணியில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அப்புறப்படுத்துமாறு அண்டை வீட்டாரிடம் கூறியுள்ளார். அவர்கள் பைக்கை எடுப்பதற்கு பதிலாக, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆசிப்பை ஆயுதங்களால் தாக்கினர்,' என்றார்.
 

இந்த சம்பவம் குறித்து ஹூமா குரேஷி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆசிஃப் குரேஷி, ஹூமாவின் சித்தப்பா மகன் என்று கூறப்படுகிறது. தற்போது தனது படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் ஹூமா, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கோஸ்லா கா கோஸ்லா 2' படத்தில் நடிக்கிறார். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகத்தில் அனுபம் கெர், போமன் இராணி, ரன்பீர் ஷோரி, விஜய் ராஜ், பிரவீன் டாபாஸ் மற்றும் ஹூமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. திரைக்கதை பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் தேர்வு இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்.'வலிமை', 'காலா' போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், ஹூமாவின் உறவினர் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.