வருண் தேஜ், லாவண்யா திரிபாதி காதல் உறுதியானது- விரைவில் நிச்சயதார்த்தம்..!!
 

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி காதலித்து வந்தது உறுதியானதை அடுத்து, அவர்களுக்கான திருமணம் விரைவில் நிச்சயிக்கப்படவுள்ளது.
 

தெலுங்கு சினிமா உலகில் பிரபல நட்சத்திர குடும்பங்களில் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பமும் ஒன்று. சிரஞ்சீவிக்கு உடன்பிறந்த இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் மூத்தவர் நாகேந்திர பாபு. இவரும் நடிகரும், இவருடைய மகன் வருண் தேஜ் மற்றும் மகள் நிஹாரிகா ஆகியோரும் நடிகர்கள் தான். 

தெலுங்கு சினிமாவில் வருண் தேஜ் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரும், ஒடிசாவைச் சேர்ந்த லாவண்யா திரிபாதியும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு இருவருமே பதிலளிக்காமல் அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன் 9-ம் தேதி வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்று திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. இதையடுத்து லாவண்யா மற்றும் வருண் தேஜ் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.