வாத்தி'... தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல் !

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ‘தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் நாளை திரையரங்குகளில்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'வாத்தி' என்று தலைப்பு வைத்து  ஆசிரியர்களின் மாண்பை குறைத்துள்ளனர். இது ஆசிரியர் சமுதாயத்தை தரக்குறைவாக நடத்தும் விதமாக உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.