சினிமாவில் கால்பதித்த வீரப்பன் மகள்- முழு விபரம்..!!

கே.என்.ஆர். ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் ‘மாவீரன் பிள்ளை’ படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

கே.என்.ஆர். ராஜா என்பவர் கதாநாயகனாக நடித்து மாவீரன் பிள்ளை என்கிற பெயரில் அவரே இயக்கியுள்ளார். இதில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவர் நடிகையாக அறிமுகமாகும் முதல் படமாகும். மாவீரன் பிள்ளை படத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மாவீரன் பிள்ளை படத்தில் நடிப்பது குறித்து பேசிய விஜயலட்சுமி, சினிமா மீது ஆர்வம் எப்போதும் இருந்து வந்தது. என் தந்தை எனக்கு தனிமனித ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை திரைப்படமாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இயல்பாகவே இருந்தது. 

அப்படியொரு சமயத்தில் ‘மாவீரன் பிள்ளை’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. எனக்கு கதையும் பிடித்திருந்ததால், நடிக்க ஒப்புக்கொண்டேன். நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் காப்பாற்றுவேன் என்று விஜயலட்சுமி தெரிவித்தார்.