இலங்கைக்கு சென்றுள்ள பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு..!
Jul 26, 2025, 07:05 IST
சென்னை 28, சரோஜா, கோவா , மங்காத்தா என பல வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் வெங்கட் பிரபு.இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் அவர் தற்போது இலங்கைக்கு வந்துள்ளமையானது இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதேவேளை வெங்கட் பிரபுவின் விமான பயணம் தொடர்பில் சிறீலங்கா எயார்லைன்ஸ் தனது எக்ஸ் பதிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பதிவில்,
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் திரு. வெங்கட் பிரபு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸில் பறந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து தென்னிந்திய திரையுலக முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.