விஜய்க்காக பிரபல நாவலை படமாக்கும் வெற்றிமாறன்..!
 

 

விடுதலை, வாடிவாசல் படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்காக பிரபல நாவலை மையப்படுத்தி அவர் கதை ரெடி செய்வது வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குநராக உள்ளார் வெற்றிமாறன். இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெறக்கூடியவையாக உள்ளன. 

இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன். தனுஷ் மஞ்சு வாரியார், டீஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றது. 

அதை தொடர்ந்து சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்தவுடன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த படங்கள் முடிந்த பிறகு வெற்றிமாறன் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

அதன்படி வெற்றிமாறன் - விஜய் இணையும் படம்’ Dead Of The Shoes’ என்ற நாவலின் தழுவலாக தான் இருக்கும் என்ற தகவல் பெரியளவில் பரவி வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு ஓராண்டு வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.