வேட்டையன் டப்பிங் ஸ்டார்ட்..! குறிவச்சா இரை விழனும்..!!

 

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது என படக் குழுவினரே அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய தினம் வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி துஷாராவை தொடர்ந்து ரித்திகா சிங் உட்பட பலரும் டப்பிங் பேசி விட்டார்கள். மேலும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் அவருக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி இன்றைய தினம் தனது டப்பிங் பணியை தொடங்கி உள்ளார்.

இந்த திரைப்படம் பா ன் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுபோலவே இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகின்றது.