‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!

 

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரைப்படமே வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறது .

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட பணிகளில் படுக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் எப்பதான் வெளியாகும் எப்போது தலைவரை திரையரங்கில் பார்க்கலாம் என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .