மிரட்டலில் விஜய் ஆண்டனி... வெளியான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர்..!
விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய் ஆண்டனி முகத்தில் கரி பூசியவாறு வந்திருந்தார். அதற்கு காரணம் அவர் போட்ட மேக்கப் எடுக்க நிறைய நேரம் ஆகும் என்பதால் அப்படியே வந்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தப் திரைப்படம் கிரைம் தில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் எதிர்வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.