விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ டீசர் வெளியீடு..!

 

விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராகவும் விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/So1Jgy1u1F8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/So1Jgy1u1F8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">