ஒரே ஒரு போட்டோவில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி..!

 

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக பல ஆண்டுகள் கிசு கிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இது தொடர்பில் இருவரும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றார்கள்.

இவர்கள் இருவரும் ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார்கள். இதில் ராஷ்மிகாவின் க்யூட் ரியாக்ஷன் அனைவரையும் கவர்ந்தது. அதற்குப் பிறகு அனைவருக்கும் பிடித்த நடிகைகளுள் ஒருவராக ராஷ்மிகாவும் திகழ்ந்து வருகின்றார். இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்த காட்சி பலரால் ரிப்பீட் மூட்டில் பார்க்கப்பட்டது. இதிலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இருவரும் வேறு எந்த படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் இவர்கள் காதலித்து வருவதாகவும் ஊர் சுற்றுவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஷ்மிகா மதிய உணவு சாப்பிடும் போட்டோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த போட்டோவில் ராஷ்மிகா நீல நிற டாப் அணிந்து உள்ளார். 

ஆனால் உண்மையில் அவர் விஜய் தேவரகொண்டாவுடன் அதே  உடையில் உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்த ரசிகர்கள் இவர்களுடைய ரகசிய காதலை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்